Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாயின் மரணத்தை தாங்க முடியாத வாலிபர்…. அக்கா வீட்டில் நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாம்பாள்புரம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய தாயார் சமீபத்தில் மரணமடைந்து விட்டதால் இவர் அருகிலுள்ள தனது அக்கா வீட்டில் வசித்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது அக்கா வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |