ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டான மாரிச்சாமி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று காலை கண்மாயில் உள்ள உயர் மின் கோபுரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.