Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி…. சிகிச்சை அளித்தும் பலனில்லை…. மனமுடைந்த கூலிதொழிலாயின் முடிவு….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கூழைய்யாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அழகர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த வயிற்று வலிக்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எதுவும் பலன் அளிக்காத காரணத்தினால் விரக்தியில் மனவேதனை அடைந்துள்ளார்.

இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை எடுத்து தின்று மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்டதும் உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |