Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஐய்யோ..! என்னால தாங்க முடியல…! தொழிலாளி எடுத்த சோக முடிவு….. தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம் ..!!

கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பகுதியில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் வேலு-கல்பனா தம்பதியினர். கூலித் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வேலு நீண்ட நாளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மொரப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேலுவின் மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |