மனைவியை பிரிந்து மனவேதனையில் இருந்த சமையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த சந்தியா என்பவரை ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் சந்தியா சதீஷிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக தனது மனைவியை பிரிந்து இருந்த மனவேதனையில் கடந்த 11ஆம் தேதி விலாவடி பகுதியில் உள்ள தனது வீட்டில் சதிஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
அதன்பின் சதீஷின் தாய் மகன் இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராததால் சந்தேகப்பட்டு விலாவடி பகுதியில் உள்ள சதீஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.