Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. கர்ப்பமாயிருக்கும் மனைவி…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

குடும்ப பிரச்சினையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் கிராமத்தில் விக்னேஷ் என்ற விவசாயி வசித்து வந்தார். இவருடைய மனைவி அபிதா கர்ப்பமாக உள்ளார். இவர்களுக்கு ஏழு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் கொண்டுள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனம் உடைந்த விக்னேஷ் தனது வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |