Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்னும் விரிவாக்கம் செய்யனும்…. கடை உரிமையாளரின் முயற்சி…. இறுதியில் நேர்ந்த சோகம்….!!

கடன் பிரச்சனையால் மனமுடைந்த கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள கொடிக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் பாலாஜி. இவர் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த கடையை விரிவாக்கம் செய்ய அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் கடையை திறக்க அனுமதி இல்லை. அதனால் வியாபாரமும் மந்தமாகவே இருந்தது.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |