திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். இவருக்கும் நாகை மாவட்டத்திலுள்ள மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று ரேவதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய உள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரேவதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என ரேவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.