டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவச்சேரி கிராமத்தை சார்ந்தவர் ஞானபண்டிதன் இவருடைய மகன் ரவி என்பவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்து ஓர் ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர்.
ரவி அனுஷாவின் தாய் வீட்டிற்கு சென்று அவரை விட்டுவிட்டு மூன்று நாட்களுக்குப் பின்பு அனுஷாவை காண்பதற்காக மஞ்சப்புத்தூர் சென்றுள்ளார். மதுபோதையில் வந்த ரவியை அனுஷா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து ரவி அனுஷாவை அடித்ததோடு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ரவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.