பெற்றோர் கண்டித்ததால் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் டைட்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமாகுலேட் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தாம்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான தாம்சன் தினமும் வெளியே சென்று தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். இதனால் முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என அவரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த தாம்சன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.