Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது கேட்கவே மாட்டேங்குது…. மன உளைச்சலில் இருந்த மூதாட்டி…. விசாரணையில் காவல்துறை….!!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் சீனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்த மூதாட்டி முதுகு தண்டு வலி காரணமாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வலி குறையவில்லை.

இந்நிலையில் தனது உடல் நிலையை நினைத்து மன உளைச்சலில் இருந்த மூதாட்டி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |