திருமணமாகி ஏழு மாதங்களில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சேலம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் பெரமன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. இவர் பட்டதாரி ஆவார். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் ஷாலினியை அவரது மாமியார் மாமனார் ஆடு, மாடு மேய்க்கவும் விவசாய பணிகளை மேற்கொள்ளவும் கூறியுள்ளனர்.
ஆனால் பட்டதாரியான ஷாலினிக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இல்லாததால் அவர் தனது மாமனார் மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது கணவரான பெரமனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளாததால் மனமுடைந்த ஷாலினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்டதும் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைகொண்டு சென்றுள்ளனர். அவர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணமான 7 மாதங்களில் பெண் தற்கொலை செய்துகொண்டதால் சேலம் உதவி கலெக்டரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.