Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செல்போனில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்…. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவியுடன் விஷம் குடித்து காதலனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் குளிக்காடு பகுதியில் வசிக்கும் தமிழரசு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பாலக்கோடு அருகில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின் அவர்கள் தங்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் செல்போனில் தற்கொலை செய்து கொள்வதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் உடனடியாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தமிழரசு மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழரசு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பாலக்கோடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |