லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி கிராமத்தில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜீவ்காந்தி கடந்த 2 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ராஜீவ் காந்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஆற்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜூவ் காந்தியின் உடலை கைப்பற்றி ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.