பிளஸ்-2 மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தேத்தாக்குடி பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தை இறந்துவிட்டதால் தாய் வாசுகியுடன் சரிதா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரிதா வீட்டு வேலை செய்யாமல் செல்போன் பார்த்து கொண்டு இருந்ததால் அவருடைய தாய் அவரை திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சரிதா குருணை மருந்தை தின்றுள்ளார்.
இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் சரிதாவை உடனடியாக மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேதாரண்யம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.