மனைவி விஷம் குடித்ததால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கூடலில் பாப்பாகுடியை சார்ந்தவர் நாகராஜ். அவருடைய மகன் ரமேஷ்க்கு அதே பகுதியைச் சேர்ந்த வேணியுடன் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ரமேஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதால் வேணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனே அக்கம்பக்கத்தினர் வேணியை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இதனையடுத்த மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் காவல்துறையினர் தன்னை விசாரிப்பார்கள் என அஞ்சி நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாப்பாகுடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.