பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வி.பி.எம்.எஸ் நகர் பகுதியில் குமார பாலசுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளக்கோவில் அருகில் உள்ள தனியார் நூல் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற குமார பாலசுதர்சன் மாலையில் வீட்டிற்கு வந்த போது உள்பக்கமாக பூட்டியிருந்தது.
அதன்பின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது சாமுண்டீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குமார பாலசுதர்சன் கதவை உடைத்து உள்ளே சென்று சாமுண்டீஸ்வரியை உடனடியாக மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சாமுண்டீஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளக்கோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.