Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வானவன்மகாதேவி மீனவா் கிராமத்தில் வைத்திலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 மாதம் ஆகிறது. இந்நிலையில் வைத்திலிங்கம் கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வைத்திலிங்கம் திடீரென சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வைத்திலிங்கத்தை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வைத்திலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |