Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் முத்துக்குமாரை மனைவி மற்றும் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மதுபோதையில் முத்துக்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரும்போது தவறிக் கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் முத்துக்குமாரை பத்திரமாக மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதனால் முத்துக்குமாரை அவரது மனைவியும் பெற்றோரும் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி செல்வி சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |