Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் சிவக்குமார் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சிவக்குமாருக்கு முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சிவக்குமார் தனது 2 குழந்தைகளுடன் குடும்பத்தை விட்டு வெளியேறி 2-வதாக ராஜி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சிவகுமார் தினமும் மது அருந்திவிட்டு 2-வது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து திடீரென சிவக்குமார் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி ஜன்னல் வழியாக பார்த்தபோது சிவகுமார் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |