விளையாடிவிட்டு வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான சந்தோஷ் அதே பகுதியிலிருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தது. இந்த நிலையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்ற சந்தோஷ் வீடு திரும்பியவுடன் ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்தோஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.