தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் மங்கலமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை சார்ந்தவர் வீரமுத்து. இவர் சென்னையில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்த வீரமுத்து விடுமுறை முடிந்த பின்னரும் வேலைக்கு செல்லாமல் ஊரிலேயே சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றில் வீரமுத்து பிணமாக மிதந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீரமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வீரமுத்து விஷம் குடித்து பின்னர் கிணற்றில் விழுந்து இறந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.