தோழியின் தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு தந்தை அனுமதிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம்அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கூலித்தொழில் செய்து வருபவர் சுந்தர்ராஜ் இவரது மகள் பிரியா(24).இவர் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் துபாயில் வேலை செய்த தோழியின் தந்தை இறந்துவிட்டார் என்ற தகவலறிந்த பிரியா தனது தோழியின் தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தனது தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார்.
அதற்கு பிரியாவின் தந்தை சுந்தர்ராஜன் “நீ இரவில் இவ்வளவு தூரம் தனியாக சென்று வருவது சரியாக இருக்காது” என கண்டித்துள்ளார். மேலும் அனுமதி மறுக்கப்பட்டதால் மன உளைச்சல் அடைந்த பிரியா வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.