Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறா….? உடல்நலக் கோளாறா….? 3 வயது மகனை தவிக்கவிட்டு…. தாய் எடுத்த முடிவு….!!

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் இருக்கும் வடுகப்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் பிரேமா. இவருக்கு புள்ளிமான்கோம்பை கிராமத்தைச் சார்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரேமா வடுகபட்டியில் இருக்கும் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். பிரேமா கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் அவர் கடந்த 23-ஆம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின்பு பிரேமாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |