முதியோர் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கந்தசாமி காயம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்களின் மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களை கவனிக்க ஆள் யாரும் இல்லாத காரணத்தினால் வெகுநாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று காலை அவர்கள் வீட்டில் இறந்து கிடந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.