மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜவுளி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணியன்-வனிதா தம்பதியினர். சுப்பிரமணியன் அதே பகுதியில் ஒரு ஜவுளி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று ஜவுளி கடையில் வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணியன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் கணவன் திரும்பி வராததால் வனிதா தொலைபேசியில் அழைத்த போது நான் வீட்டில்தான் இருக்கிறேன் என்று சுப்ரமணியன் கூறவே வனிதா பொறுமையாக இருந்துள்ளார்.
வனிதா நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது வீட்டில் சுப்பிரமணியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட வனிதா அதிர்ச்சி அடைந்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்ரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.