கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு தனலட்சுமி கீர்த்தனா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியாக வேலை செய்யும் இவர் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனையில் இருந்து வந்தார் கனேசன்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு பின்பு அவர் வீட்டில் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்தார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.