Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வலி கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த பெண்ணின் முடிவு… கதறும் பிள்ளைகள்…!!

வயிற்று வலியால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கே.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஸ்வரன்-இந்துப்ரியா தம்பதியினர். வெங்கடேசன் பஞ்சாலையில் உள்ள எந்திரங்களை பழுது பார்க்கும் வேலையை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இந்துப்ரியா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் பொள்ளாச்சியில் இருக்கும் பஞ்சாலை எந்திரங்களை பழுது பார்ப்பதற்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார்.

இதேபோல் அவர்களுடைய இரண்டு மகன்களும் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இந்துப்ரியா மனமுடைந்து தனது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவர்களுடைய இரண்டு மகன்களும் விளையாடி விட்டு வீட்டிற்கு திரும்பியபோது தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் தாடிக்கொம்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இன்று பிரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்தத் தற்கொலை தொடர்பாக இன்று பிரியாவின் தந்தையான முருகேசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |