Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடன் தொல்லை… பெண் அறநிலைத்துறை அதிகாரியின் முடிவு… கண்ணீரில் குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தூய தேவி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் திருத்தணி முருகன் கோவில் இந்து சமய அறநிலைத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து கொரோனா ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் காண்டிராக்டர் தொழிலும் பாதிக்கப்பட்டதால் பிரகாஷ் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

மேலும் அவர் ரூபாய் 30 லட்சம் வரை கடன் வாங்கியதால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் நேற்று முற்றிய நிலையில் தூய தேவி தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூய தேவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |