அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கரடியூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷியா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். வைஷியா கரடியூர் பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருக்கிறார். சிறுமியின் அண்ணன் சென்ற வருடம் ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைஷியா பெரும் சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.