Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடன் தொல்லை… காதலியும் பேசல… வாலிபர் எடுத்த சோக முடிவு…!!

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பீமநகர் பகுதியைச் சார்ந்தவர் காஜாமொய்தீன். இவருடைய மகன் ஹாரூண் பாஷா (வயது 23). இவர் அனைத்து இடங்களிலும் எல்இடி டிவிகளை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். கொரோனாவினால் சில மாதங்களாக அவருக்கு சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனை அடைந்தார். மேலும் அவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது.

தற்போது வேலை இல்லை என்பதால் அவருடைய காதலியும் அவரிடம் பேசவில்லை என கூறப்படுகிறது. இந்த இரு பிரச்சனைகளையும் தாங்க முடியாத ஹாரூண் பாஷா மிகுந்த மனவேதனைக்கு உள்ளானார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் தனியாக இருக்கும்போது மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டுத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

இத்தகவலின் பேரில் பாலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஹாரூண் பாஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |