சம்பளம் கொடுக்காததால் தூய்மைப் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வண்டியூர் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே மாநகராட்சியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து சில மாதங்களாக கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாடிக்கு மற்ற தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிக்காக சென்ருள்ளனர்.
அங்கு வேல்முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து மதுரை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வேல்முருகனுக்கு கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் அளிக்கப்படவில்லை என்றும் அதன் காரணமாக ஏற்பட்ட குடும்ப கஷ்டமும் அவர் தற்கொலைக்கு காரணம் என்று அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.