குடிப்பதற்கு மனைவி பணம் தராத விரக்தியில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலிவாக்கம் சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவில் தமிழ்ச் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் எப்போதும் தனது மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி விஜயாவிடம் தமிழ்ச்செல்வம் மது குடிக்க பணம் தருமாறு தகராறு செய்துள்ளார். அப்போது தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு விஜயா வேலைக்கு புறப்பட்டு விட்டார்.
இதனையடுத்து மனைவி மதுகுடிக்க பணம் தராததால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். அதன் பின் அருகிலிருந்தவர்கள் மயங்கி கிடந்த அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.