கணவனின் இரண்டாவது திருமணத்தால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தேன்கனிமூலை கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுரேஷ்-பார்வதி தம்பதியினர். இவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன்பின் முதல் மனைவியான பார்வதியை சுரேஷ் அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் பார்வதி தனது வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பார்வதியின் தந்தையான கோதண்டன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.