கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக அங்கு வேலை இல்லாததால் அவர் தனது சொந்த ஊருக்கே வந்துள்ளார். அவர் குடும்ப செலவுக்கு பணம் இல்லாததால் கடந்த 11 மாதங்களாக அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து எடுத்து குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.