Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை… ராணுவ வீரர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் குடும்பம்…!!

ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பொய்கை மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவருடைய மகன் வசந்தகுமார் என்பவர் லடாக்கில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடைய குடும்பத்தில் நடந்த பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |