Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… மனமுடைந்த போலீஸ்காரர்… விசாரணையில் காவல்துறை…!!

குடும்ப பிரச்சனையின் காரணமாக போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலைப் பகுதியில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். புவனேஸ்வரி இறந்துவிட்டதால் மகாலிங்கம் நிஷா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் மாரிமுத்து வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் அப்பகுதியில் தனியார் திருமண மண்டபம் எதிரே உள்ள வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |