Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதை பற்றி அப்புறம் யோசிக்கலாம்” பெற்றோரின் நிபந்தனை… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் உலகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபுதேவா என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபுதேவா தனது டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் சென்ற 6 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரபுதேவா தனது காதலியுடன் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவரது பெற்றோர் தங்கை திருமணம் முடிந்த பிறகு உன் திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்று கூறியதால், மன உளைச்சலில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் பொன்னாரை பகுதியில் உள்ள சுடுகாடு அருகே மாந்தோப்பு ஒன்றில் பிரபுதேவா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற உலகநாதன் மற்றும் அவரது குடுபத்தினர் பிரபுதேவா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தற்கொலை குறித்து திருவையாறு காவல் நிலையத்தில் உலகநாதன் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவையாறு காவல் துறையினர் பிரபுதேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவையாறு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |