கிணற்றில் கால் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொல்லக்கொட்டாய் கிராமத்தில் லட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றது. இவருக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் லட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் பின்புறத்தில் 30 அடி ஆழ கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார்.
இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லக்ஷ்மியை மீட்டபோது அவர் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.