மூட்டு வலியால் முதியவர் விஷ மாத்திரையை உண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரம் பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் மூட்டுவலியால் 15 வருடங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.மேலும் இவருக்கு பல்வேறு உபாதைகள் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் மூட்டுவலிக்காக அவர் பல்வேறு மாத்திரை, மருந்துகளை சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சென்ற வியாழக்கிழமை அன்று மூட்டுவலி அதிக அளவில் இருந்துள்ளது. இதனால் வலியை பொறுத்து கொள்ள முடியாமல் கருப்புசாமி விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட உறவினர்கள் கருப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர் கரூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சின்னதாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.