Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழு போதையில் வந்த கட்டிட தொழிலாளி…. கண்டித்த குடும்பம்…. சமையலறையில் செய்த கொடூரம்….!!

மது அருந்தியதை கண்டித்ததால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் விவேக்பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கோபிநாத் என்ற மகனும் உள்ளனர். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த விவேக்பாண்டியை அவரது அக்காவும், அம்மாவும் கண்டித்து திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த விவேக்பாண்டி சமையலறையில் இருந்த கத்தியால் தன்னைத் தானே மோசமாக குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த விவேக்பாண்டியை அவரது உறவினர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |