கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நைனியப்பா பிள்ளை வீதியில் வசித்து வருபவர் மன்சூர் அகமது-மரியம் பீவி தம்பதியினர். மன்சூர் அகமது அதே பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மது பழக்கம் இருப்பதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில் மரியம் பீவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த மன்சூர் அகமது தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மன்சூர் அகமதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.