Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிக்கிற பழக்கத்தை விட முடியாதா… கண்டித்த மனைவிக்கு… காத்திருந்த அதிர்ச்சி…!!

மதுபழக்கத்தை விடுமாறு மனைவி கண்டித்ததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் இவர் அடிக்கடி நோய்வாய்ப் பட்டுள்ளார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை தொடர்ந்து விடாமல் இருப்பதால் அவருடைய மனைவி அவரை கண்டித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த பழனிச்சாமி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து அதை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |