Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலில் ஏமாற்றம்… மனமுடைந்த வாலிபரின் செயல்… விசாரணை நடத்தும் போலீஸ்…!!

ஒருதலைக் காதலில் ஈடுபட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள சின்னகொல்லப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன். அவருடைய மகனான விக்னேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்த விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விக்னேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |