தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமாரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சிவகுமார் மது அருந்திவிட்டு சேவூரில் வசிக்கும் தனது சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரது சகோதரர் உடனடியாக சிவகுமார் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சிவகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பெருமாநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகுமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.