மன உளைச்சலால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மாங்குட்டைபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தினேஷ்குமார். இவர் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலைக்கு தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருப்பதாக காணப்பட்டுள்ளார். இதைப்பற்றி தனது நண்பர்களிடம் அவர் அடிக்கடி பேசியுள்ளார்.
இதனால் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெறுப்படைந்ததால் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷ் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் வாலிபரின் இறப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.