Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் தொல்லை… தாய் எடுத்த முடிவு… பிள்ளைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடன் சுமை காரணமாக கொசு மருந்தை குடித்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்-சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு கடன் சுமை அதிகமானதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி வீட்டில் தனியாக இருக்கும்போது கொசு மருந்தை எடுத்து தண்ணீரில் கலந்து அதனை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |