Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பெற்றோரின் கண்டிப்பு… வீட்டைவிட்டு வெளியேறிய வாலிபர்… காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாசிலாமணி. இவருடைய மகன் ரமேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் சிற்பியாக வேலை செய்து வந்தார். இவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளதால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் இருந்து கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வெளியேறியுள்ளார்.

அதன்பின் ரமேஷை அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ரமேஷின் பெற்றோர் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கடம்பாடி காட்டுப்பகுதிக்கு சிலர் விரகு பொறுக்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது மரத்திலிருந்து அழுகிய நிலையில் இருந்த உடல் பகுதி கீழே விழுந்துள்ளது. மேலும் அழுகிய தலைப் பகுதி மட்டும் மரத்தில் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது அது காணாமல் போன ரமேஷின் உடல் என்பதும் பெற்றோர் கண்டித்ததால் ரமேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரது உடலை விலங்குகள் கடித்துக் குதறியதால் தலை மற்றும் உடல் பகுதி தனியாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |