தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நொய்யல் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் இருக்கும் பலமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்-சங்கீதா தம்பதியினர். சங்கீதாவுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.