பெரம்பலூரில் தாய் கண்டிப்பதால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசலூர் பாரதிநகரில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்தார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். செல்வகுமாருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு லித்திகா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. செல்வகுமார் தனது குடும்பத்துடன் சத்திரமனை வடக்கு தெருவில் வசித்து வந்துள்ளார். சிவகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
மேலும் அவர் மது அருந்தி விட்ட்டால் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி கொண்டிருப்பத்தை வழக்கமாக வைத்து வந்துள்ளார். அதனை அவரது தாய் சாந்தி மோசமாக கண்டித்துள்ளார். இதனால் செல்வகுமார் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் செல்வகுமார் குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அவர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.